பூசணிக்காய் வடை

தேவையான பொருட்கள்

  • பூசணிக்காய்
  • கடலைப்பருப்பு
  • கடலை மாவு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • சோம்பு
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் கடலைப்பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து 1/2 டம்ளர் தண்ணீர், சிறிதளவு இஞ்சி, 1/2 ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் ஒரு கப் துருவிய பூசணிக்காய், ஒரு கப் நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி, 1/4 கப் கடலை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post