மரவள்ளி கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

  • மரவள்ளி கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • கடுகு
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி
  • பூண்டு
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • மிளகாய் தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 500 கிராம் மரவள்ளி கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து பாதி அளவு வேக வைக்கவும்.

ஒரு கடாயில் 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.

வேக வைத்துள்ள மரவள்ளி கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விட்டு இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post