உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • கடுகு
  • சோம்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

500 கிராம் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின், தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 25 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் பொடித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post