தேவையான பொருட்கள்
- ஆப்பிள்
- சர்க்கரை
- எண்ணெய்
- கொக்கோ பவுடர்
- ட்ரை கோக்கனட்
- பால்
செய்முறை
ஒரு பெரிய ஆப்பிளை தோலை நீக்கிவிட்டு நன்கு துருவி கொள்ளவும்.
ஒரு கடாயில் 100 கிராம் சர்க்கரை, 100 மில்லி பால் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலந்து விடவும்.
பால் சூடான உடன் துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். பின், 25 கிராம் கொக்கோ பவுடர் சேர்த்து நன்கு இறுகும் வரை கிளறவும்.
இறுதியாக நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். ஆறியபின் சிறிய உருண்டைகளாக பிடித்து அதன் மேலே ட்ரை கோக்கனட் தூவி விடவும்.
