மசாலா ஸ்டப்டு இட்லி

தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு
  • உருளைக்கிழங்கு
  • கேரட்
  • பெரிய வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • தனியா தூள்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கப் துருவிய கேரட், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் தனியா தூள், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

இதனுடன், 1/4 கப் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

தயார் செய்து வைத்துள்ள மசாலா ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின், இட்லி பாத்திரத்தில், 1/2 கரண்டி இட்லி மாவு ஊற்றி அதன் மேல் தட்டி வைத்துள்ள மசாலா வைத்து பின் மசாலாவை மூடும் படி மேலும் சிறிதளவு இட்லி மாவு சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post