தேவையான பொருட்கள்
- இட்லி மாவு
- பெரிய வெங்காயம்
- கேரட்
- சீரகம்
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- தக்காளி
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
- பாசிப்பருப்பு
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், 1/4 கப் துருவிய கேரட், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு சிறிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் தோசை மாவுடன் வதக்கிய மசாலா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
