பாகற்காய் தொக்கு

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்
  • புளி
  • தக்காளி
  • மிளகாய் தூள்
  • சாம்பார் பொடி
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • வெந்தயம்
  • உளுந்து பருப்பு
  • கடலைப்பருப்பு
  • காய்ந்த மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • தேங்காய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

200 கிராம் பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 1/2 கப் புளிக்கரைசல், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இறுகி வரும் வரை வேக வைக்கவும்.

இறுதியாக, ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post