வெங்காய வறுவல்

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • கடலைப்பருப்பு
  • உளுந்து பருப்பு
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கறிவேப்பிலை

செய்முறை

கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 200 கிராம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

Previous Post Next Post