ஆனியன் சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • சப்பாத்தி மாவு
  • பெரிய வெங்காயம்
  • கேரட்
  • குடைமிளகாய்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தியாக தேய்த்து தோசை கல்லில் வைத்து ஒரு பக்கம் வெந்தவுடன் அடுப்பை மெதுவாக வைத்து அதன் மேல், சிறிதளவு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சிறிதளவு பொடியாக நறுக்கிய குடை மிளகாய், சிறிதளவு துருவிய கேரட், 1/4 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி நன்கு வெந்தவுடன் ரோல் செய்து கொள்ளவும்.

Previous Post Next Post