முட்டைக்கோஸ் சில்லி

தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ்
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • சோள மாவு
  • கடலை மாவு
  • காலிஃப்ளவர் சில்லி மசாலா பொடி
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் நறுக்கிய முட்டைக்கோஸ், நான்கு ஸ்பூன் சோள மாவு, இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு ஸ்பூன் காலிபிளவர் சில்லி மசாலா பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பின், தயார் செய்து வைத்துள்ள முட்டைக்கோஸை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post