தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- நாட்டுச் சர்க்கரை
- தேங்காய்
- ஏலக்காய் பொடி
- முந்திரி
- உலர் திராட்சை
- நெய்
செய்முறை
ஒரு கப் உளுந்து பருப்புடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
தயார் செய்து வைத்துள்ள பாகை அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்த்து அதனுடன் 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/2 கப் நெய்யில் வறுத்த துருவிய தேங்காய் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
