தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- அரிசி மாவு
- சீரகம்
- எண்ணெய்
- உப்பு
செய்முறை
ஒரு கப் உளுந்து பருப்பை மிதமாக வறுத்து எடுக்கவும். பின், அரைத்து சலித்துக் கொள்ளவும்.
இதனுடன், சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மேலும், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை மெல்லிசாக விரித்து ஒரு கப் மூடியை வைத்து வெட்டி எடுக்கவும். பின், இவற்றை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
