பச்சை மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு
  • அரிசி மாவு
  • மிளகாய் தூள்
  • பச்சை மிளகாய்
  • கேரட்
  • பீன்ஸ்
  • உருளைக்கிழங்கு
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • சமையல் சோடா
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு 1/4 கப், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

பின், பச்சை மிளகாயை நடுவில் வெட்டி விதையை நீக்கிவிட்டு தயார் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி தயார் செய்து வைத்துள்ள மாவில் போட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


Previous Post Next Post