தேவையான பொருட்கள்
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- மிளகு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- தக்காளி
- கருவேப்பிலை
- எண்ணெய்
- பெரிய வெங்காயம்
- மஞ்சள் தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் 25 மில்லி எண்ணெய் ஊற்றி, 15 பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்து அரைக்கவும்.
மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கலந்து விடவும்.
ஒரு கப் சாதம் சேர்த்து கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி விடவும்.
