சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்

  • காய்ந்த மிளகாய்
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • கடலைப்பருப்பு
  • துவரம் பருப்பு
  • மிளகு
  • அரிசி
  • வெந்தயம்
  • கடுகு
  • உளுந்து பருப்பு
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில், 50 கிராம் காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.

50 கிராம் கொத்தமல்லி, 25 கிராம் கடலைப்பருப்பு, 25 கிராம் துவரம் பருப்பு மற்றும் 25 கிராம் அரிசியை தனித்தனியே வறுக்கவும்.

பின், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம் தனித்தனியே வறுக்கவும்.

10 கிராம் பெருங்காயக் கட்டி மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நல்லெண்ணையில் பொரிக்கவும்.

இறுதியாக, அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இதனுடன் நான்கு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

Previous Post Next Post