தேவையான பொருட்கள்
- தேங்காய்
- கருப்பட்டி
- சுக்குப்பொடி
- எண்ணெய்
செய்முறை
இரண்டு கப் பொடியாக்கிய கருப்பட்டி, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை கொதிக்க வைத்து கரைந்த உடன் வடிகட்டி ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இதனுடன் இரண்டு கப் துருவிய தேங்காய், 1/2 ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இறுகும் வரை கலந்து விடவும்.
பின், ஒரு தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள கலவையை தட்டில் ஊற்றி ஆற வைத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
