ஆம்லெட்

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகுத்தூள்
  • கருவேப்பிலை
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதனுடன் இரண்டு முட்டை சேர்த்து கலந்து விடவும். இதனை தோசைக்கல்லில் ஊற்றி 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் தூவி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post