தேவையான பொருட்கள்
- பேரிச்சம்பழம்
- தேங்காய்
- நாட்டுச் சர்க்கரை
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின், அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
1/4 கப் துருவிய பேரிச்சம்பழம், 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து இறுகி வரும் வரை கிளறி விடவும்.
பின்னர், ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
