தேவையான பொருட்கள்
- முந்திரி
- மைதா
- சர்க்கரை
- நெய்
- எண்ணெய்
- ஃபுட் கலர்/கேசரி பவுடர்
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில், ஒரு கப் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் மற்றும் 1/4 ஸ்பூன் ஃபுட் கலர்/கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின், 1/4 கப் மைதாவை தோசை மாவு பதத்திற்கு தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இறுகும் வரை கலந்து விடவும். பின், 1/2 கப் பொடியாக்கிய முந்திரி சேர்த்து நன்கு கலந்து விடவும். இடையே, 25 மில்லி எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
