தேவையான பொருட்கள்
- கருப்பு சுண்டல்
- உளுந்து பருப்பு
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- சோம்பு
- சீரகம்
- பெரிய வெங்காயம்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் கருப்பு சுண்டல், 1/4 கப்-க்கு குறைவாக உளுந்து பருப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து இதனுடன் நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, சிறிதளவு பூண்டு, ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள மாவை இரண்டு மணி நேரங்கள் வைக்கவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின், வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கும்.
