தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சாம்பார் பொடி
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- சீரகம்
- வெந்தயம்
- கடுகு
- புளி
- பெருங்காயத்தூள்
- அரசாணிக்காய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
குக்கரில், ஒரு கப் துவரம் பருப்பு, இரண்டு கப் தண்ணீர், இரண்டு தக்காளி, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், 1/4 கப் பொடியாக நறுக்கிய அரசாணிக்காய், இரண்டு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 1/4 கப் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின், 1/4 கப் புளிக்கரைசல், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் வேக வைத்துள்ள பருப்பை மசித்து இதனுடன் சேர்க்கவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
