பிரட் வடை

தேவையான பொருட்கள்

  • பிரட்
  • கடலைப்பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • சோம்பு
  • இஞ்சி
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

1/2 கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவுடன், நான்கு பிரட் துண்டுகளில் ஓரங்களை நீக்கிவிட்டு பொடித்து சேர்க்கவும், 1/4 கப் பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.

பின், பிசைந்து வைத்துள்ள மாவை வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post