தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- பால்
- சர்க்கரை
- மைதா
- முட்டை
- சமையல் சோடா
- எண்ணெய்
செய்முறை
முதலில், ஒரு கப் பால், 1/2 கப் சர்க்கரை சேர்த்து பால் சூடானவுடன் ஒரு கப் கொக்கோ பவுடர் சேர்த்து பாகு பதத்திற்கு கலந்து விடவும்.
பின், ஒரு பாத்திரத்தில், ஒரு கப் மைதா, ஒரு முட்டை, 1/2 ஸ்பூன் சமையல் சோடா, 1/4 கப் பொடியாக்கிய சர்க்கரையை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
இறுதியாக, கேக்கை தயார் செய்து வைத்துள்ள கொக்கோ பாலில் போட்டு எடுக்கவும்.
