தேவையான பொருட்கள்
- ரவை
- உளுந்தம் பருப்பு
- சர்க்கரை
- கேசரி பவுடர்
- நெய்
- எண்ணெய்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
செய்முறை
1/2 கப் உளுந்தம் பருப்பை வறுத்து அரைக்கவும். 1/2 கப் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர், 1/2 ஸ்பூன் கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், இரண்டு கப் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள உளுந்தம் பருப்பு, வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடுப்பை மெதுவாக வைத்து இறுகும் வரை நன்கு கிளறவும். இடையே, நெய் (25 மில்லி) மற்றும் எண்ணெய் (25 மில்லி) கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
