தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- கடலை மாவு
- சோள மாவு
- பெரிய வெங்காயம்
- பொட்டுக்கடலை
- காய்ந்த மிளகாய்
- மிளகாய் தூள்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் துருவிய பீட்ரூட், 1/4 கப் கடலை மாவு, நான்கு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சோம்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, இரண்டு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில், 250 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை எண்ணெயில் பொடித்து விட்டு பொரிக்கவும்
