தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
- தேங்காய்
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் 2 ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
ஒரு குக்கரில் ஒரு கப் பாசிப்பருப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு கப் வெல்லம் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 1/4 கப் உலர் திராட்சை மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
