தேங்காய் பன்

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • மைதா
  • பால்
  • ஈஸ்ட்
  • சர்க்கரை
  • டூட்டி ஃப்ரூட்டி
  • எண்ணெய்

செய்முறை

மிதமாக சூடான ஒரு கப் பாலுடன் நான்கு ஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு கப் மைதா, ஈஸ்ட் கலந்து வைத்துள்ள பால், 1/4 கப் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து இரண்டு மணி நேரம் வைக்கவும்.

ஒரு கடாயில் ஒரு கப் துருவிய தேங்காய், 1/2 கப் சர்க்கரை, மற்றும் 1/4 கப் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை இரண்டாக பிரித்து‌ ஒவ்வொன்றாக விரித்து ஒரு பங்கு மாவில் தயார் செய்து வைத்துள்ள தேங்காயை வைத்து அதன் மேல் மற்றொரு பங்கு மாவை வைத்து நன்கு மூடி விடவும். பின்னர், ஓவனில் வைத்து வேக வைக்கவும்.




Previous Post Next Post