தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- மிளகாய் தூள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், நீளமாக நறுக்கிய 500 கிராம் கத்திரிக்காய், 700 மில்லி தண்ணீர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின், தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் காரத்திற்கு தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து வெயிலில் நன்கு காய வைக்கவும்
