தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- உருளைக்கிழங்கு
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- எண்ணெய்
- உப்பு
- இஞ்சி-பூண்டு விழுது
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
250 கிராம் சேனைக்கிழங்கு மற்றும் 250 கிராம் உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.
வேகவைத்த கிழங்கிலிருந்து தண்ணீரை வடித்து விட்டு உருளைக்கிழங்கில் தோலை நீக்கிவிட்டு இரண்டு கிழங்கையும் நன்கு மசிக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
தயார் செய்து வைத்துள்ள கிழங்கு மசாலாவை கட்லெட் போல தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
