தேவையான பொருட்கள்
- பாகற்காய்
- புளி
- வெல்லம்
- மிளகாய் தூள்
- வெந்தயம்
- கடுகு
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
200 கிராம் பாகற்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி இரண்டு மணி நேரம் வைக்கவும்.
ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், நறுக்கி வைத்துள்ள பாகற்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகு வறுத்து அரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர், 1/4 கப் புளிக்கரைசல் சேர்த்து இறுகி வரும் வரை வதக்கவும்.
