பீட்ரூட் பிரட்டல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தேங்காய்
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • கடுகு
  • சீரகம்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

300 கிராம் துருவிய பீட்ரூட், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.

பின், ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து சேர்க்கவும். இதனை ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post