பீட்ரூட் சாதம்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • மிளகாய் தூள்
  • கடுகு
  • பாசிப்பருப்பு
  • கடலைப்பருப்பு
  • உப்பு
  • சாதம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

100 கிராம் துருவிய பீட்ரூட், தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

பின், ஒரு கப் சாதம் சேர்த்து கலந்து விட்டு இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post