பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • தேங்காய்
  • கடுகு
  • கடலைப்பருப்பு
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

250 கிராம் பொடியாக நறுக்கிய பீட்ரூட், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.


Previous Post Next Post