தேவையான பொருட்கள்
- அவரைக்காய்
- துவரம் பருப்பு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- சாம்பார் தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- தேங்காய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- சீரகம்
- கடலைப்பருப்பு
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் துவரம் பருப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, பத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
100 கிராம் பொடியாக நறுக்கி அவரைக்காய், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர், 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
இதனுடன் வேக வைத்துள்ள பருப்பை தண்ணீரை வடிக்காமல் சேர்க்கவும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
