தேவையான பொருட்கள்
- மீன்
- புளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- சோம்பு
- கடுகு
- வெந்தயம்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் சோம்பு, நான்கு காய்ந்த மிளகாய், பத்து சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஒரு சிறிய தக்காளி, ஒரு ஸ்பூன் தனியா தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், 1/4 கப் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
200 கிராம் மீன் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கலந்து விட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.
