ஆம்பூர் பிரியாணி


தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா அரிசி
  • மட்டன்
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • பட்டை
  • பிரியாணி இலை
  • இலவங்கம்
  • ஏலக்காய்
  • கல்பாசி
  • தயிர்
  • எலுமிச்சை
  • எண்ணெய்
  • நெய்
  • பெரிய வெங்காயம்
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

முதலில், 25 கிராம் இஞ்சி, 25 கிராம் பூண்டு, ஆறு காய்ந்த மிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

குக்கரில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, இரண்டு பிரியாணி இலை, இரண்டு இலவங்கம், கல்பாசி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் மட்டன் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/4 கப் தயிர் சேர்த்து கலந்து விடவும்.

இரண்டு கப் சீரக சம்பா அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து சேர்க்கவும், இதனுடன் நான்கு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.

இறுதியாக, 25 மில்லி நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post