தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- தேங்காய்
- பொட்டுக்கடலை
- சோம்பு
- கல்பாசி
- இஞ்சி
- பூண்டு
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- உப்பு
- மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் பொட்டுக்கடலை, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கல்பாசி, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின், இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலா, 200 கிராம் வேக வைத்து பொடித்த உருளைக்கிழங்கு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். இந்த குருமா இட்லி தோசைக்கு உகந்தது.
