தேவையான பொருட்கள்
- பிரட்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
இரண்டு பிரட் எடுத்து அதை நான்கு புறமும் உள்ள ஓரங்களை வெட்டி நீக்கிவிடவும். பின், பிரட்டை நன்கு பொடித்து எடுக்கவும்.
பொடித்து வைத்துள்ள பிரெட் உடன், இரண்டு முட்டை, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர், தோசை கல்லில் ஊற்றி மிளகுத்தூள் தூவி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
