தேவையான பொருட்கள்
- சின்ன நெல்லிக்காய்
- உப்பு
- காஷ்மீரி மிளகாய் தூள்
- கடுகு
- வெந்தயம்
- காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கப் சின்ன நெல்லிக்காய் மற்றும் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு நாள் நன்கு ஊற வைக்கவும்.
இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விடவும்.
பின், ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் வறுத்து பொடியாக்கிய வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் ஊற வைத்துள்ள நெல்லிக்காய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
