எலுமிச்சை ஊறுகாய்

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை பழம்
  • உப்பு
  • காய்ந்த மிளகாய்
  • வெந்தயம்
  • கறிவேப்பிலை
  • பெருங்காயத்தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு

செய்முறை

10 எலுமிச்சை பழங்களை ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் நான்கு துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஒரு கைப்பிடி கல் உப்பை பொடியாக்கி சேர்த்து கலந்து விட்டு இரண்டு நாட்கள் ஊறவைக்கவும். இடையே அவ்வப்பொழுது கலந்து விடவும்.

ஒரு கடாயில், 10 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்து அரைக்கவும்.

பின், அரைத்து வைத்துள்ள மிளகாயை ஊற வைத்துள்ள எலுமிச்சையுடன் கலக்கவும்.

ஒரு கடாயில், 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இதனை ஊற வைத்துள்ள எலுமிச்சையுடன் கலந்து விடவும்.

Previous Post Next Post