தேவையான பொருட்கள்
- பெரிய நெல்லிக்காய்
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- கடலைப்பருப்பு
- தேங்காய்
- புளி
- இஞ்சி
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கடுகு
செய்முறை
ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய், பத்து சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய நெல்லிக்காய் இரண்டு, சிறிதளவு இஞ்சி, சிறிதளவு புளி, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
பின், 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து தாளிக்கவும்.
