தேவையான பொருட்கள்
- தினை அரிசி மாவு
- பொட்டுக்கடலை மாவு
- கடலை மாவு
- நல்லெண்ணெய்
- எண்ணெய்
- எள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- மிளகாய் தூள்
செய்முறை
ஒரு கப் தினை அரிசி மாவு, 1/4 கப் பொட்டுக்கடலை மாவு, 1/4 கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் எள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 25 மில்லி நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
பின், முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
