தேவையான பொருட்கள்
- கோதுமை
- பால்
- வெல்லம்
- நெய்
- ஏலக்காய்
- முந்திரி
- உலர் திராட்சை
செய்முறை
ஒரு கப் கோதுமையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின், வறுத்து வைத்துள்ள கோதுமையை ஒன்று இரண்டாக அரைக்கவும்.
குக்கரில், வறுத்து அரைத்து வைத்துள்ள கோதுமை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
இதனுடன் ஒரு கப் பொடியாக்கிய வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
1/2 கப் பால், 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக, இரண்டு ஏலக்காய் தட்டி சேர்க்கவும் இதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
