தேவையான பொருட்கள்
- கேரட்
- கடலை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் துருவிய கேரட், 1/2 கப் கடலை மாவு, இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் 1/4 டம்ளர்க்கும் குறைவாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
