தேவையான பொருட்கள்
- முட்டை
- சின்ன வெங்காயம்
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- தனியா தூள்
- சோம்பு
- இஞ்சி-பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- தேங்காய்
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், பத்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் தனியா தூள் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
பின், ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின், வேக வைத்த ஐந்து முட்டையை இரண்டு துண்டுகளாக வெட்டி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
