தேவையான பொருட்கள்
- தேங்காய்
- பாசிப்பருப்பு
- கடலைப்பருப்பு
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- கடுகு
- எண்ணெய்
- சாதம்
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
