காளான் வறுவல்

தேவையான பொருட்கள்

  • காளான்
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • சிக்கன் மசாலா பொடி
  • மிளகாய் தூள்
  • கடுகு
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

ஒரு தக்காளி மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் காளான், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post