தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி
- புதினா
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- சோம்பு
- சிக்கன் மசாலா பொடி
- பிரியாணி மசாலா பொடி
- பட்டை
- ஏலக்காய்
- லவங்கம்
- எண்ணெய்
- நெய்
- உப்பு
செய்முறை
குக்கரில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின், நான்கு தக்காளி, இரண்டு கைப்பிடி புதினா, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இரண்டு டம்ளர் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும். மேலும், நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
பின், நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
