ஸ்வீட் உளுந்து களி

தேவையான பொருட்கள்

  • உளுந்து பருப்பு
  • நாட்டுச் சர்க்கரை
  • இளநீர் தேங்காய்
  • நல்லெண்ணெய்
  • எள்

செய்முறை

ஒரு கப் உளுந்து பருப்பு பொன்னிறமாக வறுத்து அரைக்கவும்.

பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பாதி அளவு இறுகியவுடன் இதனுடன் ஒரு கப் நாட்டுச் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எள், பொடியாக நறுக்கிய இளநீர் தேங்காய் ஒரு கப் சேர்த்து இறுகி வந்தவுடன் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post