புதினா மசாலா முட்டை

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • புதினா
  • கொத்தமல்லி இலை
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் புதினா, 1/4 கப் கொத்தமல்லி இலை, ஒரு ஸ்பூன் சோம்பு, நான்கு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின், அரைத்து வைத்துள்ள புதினா மசாலா சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

ஐந்து முட்டையை வேக வைத்து தோலை நீக்கிவிட்டு நான்கு புறமும் கீறி விட்டு சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

Previous Post Next Post